பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கழிவறை கட்டிடம் திறப்பு விழா. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 பிப்ரவரி, 2024

பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கழிவறை கட்டிடம் திறப்பு விழா.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கழிவறை கட்டிடம் திறப்பு விழா பாலக்கோடு சட்டமன்ற உறுப்பிணர் கே.பி.அன்பழகன் தலைமையில் நடைப் பெற்றது.


நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் புனிதா முன்னிலை வகித்தார். கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பேனா வழங்கும், நிகழ்ச்சியில்  நடைப்பெற்றது, அப்போது 10ம் வகுப்பு படித்து கொண்டிருந்த மாணவி பிரியதர்ஷினி இப்பள்ளியில் 1800 மாணவிகள் பயின்று வருவதாகவும், பள்ளியில் உள்ள கழிவறை போதுமானதாக இல்லை எனவும், இதனால் கூடுதல் கழிவறை கட்டிடம்  கட்டி தர வேண்டும் என பாலக்கோடு சட்டமன்ற உறுப்பிணர் கே.பி.அன்பழகன் அவர்களிடம் கோரிக்கை விடுத்தார், அதனை ஏற்று சட்டமன்ற மேம்பாட்டு நிதியில் இருந்து 10 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து புதிய  கழிவறை கட்டும் பணியை தொடங்கி வைத்தார்.

கட்டுமான பணிகள் முடிவடைந்ததை அடுத்து இன்று திறப்பு விழா நடைப்பெற்றது. இதில் தற்போது அதே பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி பிரியதர்ஷினியை அழைத்து மாணவியின் கையால் ரிப்பன் வெட்டி புதிய கழிவறை கட்டிடத்தை திறக்க வைத்தார். கட்டிடத்தை திறந்து வைத்த மாணவி, கோரிக்கையை ஏற்று உடனடியாக கழிவறை கட்டி தந்த கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ விற்க்கு மாணவிகள் சார்பில்  நன்றி தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரங்கநாதன், பொருளாளர் பாலகிருஷ்ணன், அதிமுக  ஒன்றிய செயலாளர்கள் கோபால், வக்கில் செந்தில்.நகர செயலாளர் ராஜா மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad