தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளியை சேர்ந்த கூலி தொழிலாளியின் 16 வயது மகள், அப்பகுதியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இவரும், சி.எம். புதூரை? சேர்ந்த சிப்ஸ் கடை ஊழியர் துரைபாண்டி (வயது.27) என்பவரும், கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
கடந்த ஜனவரி 1ம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தலைமறைவாக இருந்தனர். இந்நிலையில் சிறுமி கர்ப்பமானதை அறிந்து, சிறுமியை மாரண்டஅள்ளியில் உள்ள அவரது வீட்டில் விட்டு விட்டு தலைமறைவானார்.
இதுகுறித்து மாணவி பாலக்கோடு அணைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மாணவியை கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவான சிப்ஸ் கடை ஊழியரை தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக