தருமபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 12-13 மற்றும் 16 ஆகிய வார்டுகளில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.13லட்சம் மதிப்பில் உயர்மின் கோபுர விளக்கு தொடங்கி வைக்கப்பட்டது, இந்நிகழ்ச்சிக்கு நகர கழக செயலாளர் முல்லைரவி தலைமை தாங்கினார் பேரூராட்சி தலைவர் இந்திராணிதனபால் துணை தலைவர் சூர்யாதனபால் ஆகியோர் முன்னிலை வகித்தார் சிறப்பு விருந்தினராக தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டிஎன்வி.எஸ்.செந்தில்குமார் கலந்து கொண்டு உயர்மின் கோபுரவிளக்கை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணை செயலாளர் செ.கிருஷ்ணகுமார், ஆதிதிராவிட நல குழு மாநில துணை செயலாளர் எஸ்.ராஜேந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் வே.சௌந்தரராசு, நகர நிர்வாகிகள் செல்வதயாளன், விண்ணரசன், மோகன், மதியழகன், பேரூராட்சி உறுப்பினர் அருள்மொழிமோகன், பொதுக்குழு உறுப்பினர் கலைவாணிசரவணன், ஐடிவிங் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கு.தமிழழகன், இளைஞரணி கோட்டிஸ்வரன், சிறுபான்மை அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஏ.முஜீப் , மருத்துவரணி துணை அமைப்பாளர் திருவேங்கடம், முன்னாள் வர்த்தகரணி அமைப்பாளர் சூர்யாவெங்கடேசன், இமயம், காதர்பாஷா, சரவணன், மாதேஷ், ஜேசிபிமோகன், பேரூராட்சி உறுப்பினர் ஜீவா அன்பழகன், சுப்பிரமணி, எஸ்ஏசி.குமார் நிர்வாகிகள் முனுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- தகடூர்குரல் செய்திகளுக்காக அரூர் செய்தியாளர் சிற்றரசு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக