பென்னாகரம் மடம் மேல்தெரு பகுதியில் இருசக்கர வாகனம் திருடி சிசிடிவி காட்சியில் சிக்கிய 17 வயது மதிக்கத்தக்க சிறுவன். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 14 பிப்ரவரி, 2024

பென்னாகரம் மடம் மேல்தெரு பகுதியில் இருசக்கர வாகனம் திருடி சிசிடிவி காட்சியில் சிக்கிய 17 வயது மதிக்கத்தக்க சிறுவன்.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கூத்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட மடம் மேல்தெரு பகுதியில் முனுசாமி மகன் பெருமாள் வயது 44 வசித்து வருகிறார் இவர் வீட்டு அருகில் இருசக்கர வாகனத்தை நிருத்திவிட்டு சொந்த வேலை காரணமாக வெளியூர் சென்று இருந்தார் மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்து ஒகேனக்கல் காவல் நிலையத்தில் பெருமாள் புகார் அளித்துள்ளார் புகாரின் பேரில் ஒகேனக்கல் போலீசார் சிசிடிவி கேமரா ஆய்வு மேற்கொண்டதில்  சுமார் 17 வயது மதிக்கத்தக்க சிறுவன் இருசக்கர வாகனம் திருடி சென்றது தெரியவந்தது இது குறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து 17 வயது சிறுவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.


17 வயது சிறுவன் இருசக்கர வாகனம் திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad