"உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டம்; 2வது நாளாக பாப்பிரெட்டிபட்டியில் ஆய்வுகளை மேற்கொண்டுவரும் மாவட்ட ஆட்சியர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 1 பிப்ரவரி, 2024

"உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டம்; 2வது நாளாக பாப்பிரெட்டிபட்டியில் ஆய்வுகளை மேற்கொண்டுவரும் மாவட்ட ஆட்சியர்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற சிறப்பான திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் 2வது நாளாக, அரசு நலத்திட்டங்களின் செயல்பாடுகள், நடைபெற்று வரும் திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட "உங்களைத்தேடி, உங்கள் ஊரில்" என்ற சிறப்பான திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் 2வது நாளாக, அரசு நலத்திட்டங்களின் செயல்பாடுகள், நடைபெற்று வரும் திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (01.02.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு. உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார்கள். இத்திட்டத்தின்படி மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் பல்வேறு மாவட்ட அளவிலான அலுவலர்கள் பொதுமக்களை அவர்களின் வீட்டு வாசலில் அணுகும் நோக்கில், ஒவ்வொரு மாதமும் வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.


இதன் அடிப்படையில், தருமபுரி மாவட்டத்தில் 2024 ஜனவரி மாதத்திற்கான "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்ட முகாம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் நேற்றைய தினம் முதல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட அளவிலான முதன்மை அலுவலர்கள் கலந்துகொண்டனர். “உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் அரசின் நலத்திட்டங்களின் செயல்பாடுகள், பல்வேறு திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்து நேற்றைய தினம் ஆய்வு மேற்கொண்டார்கள்.


மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி தகுதியான மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு அறிவுரைகளை அலுவலர்களுக்கு வழங்கினார்கள். இந்த ஆய்வினை தொடர்ந்து, பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இதனைதொடர்ந்து T.துரிஞ்சிஅள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுடன் உங்கள் ஊராட்சியில் அடிப்படை தேவைகள் குறித்து பொதுமக்களுடன் கலந்துரையாடினார்கள். குறிப்பாக, சாலை வசதி, மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி, உயர்கல்வி படிப்பதற்காக உங்கள் அருகாமையில் அரசு கலைக்கல்லூரி, கல்லூரி விடுதி ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து வசதி உடனடியாக நிறைவேற்றப்படும். மேலும், இருளர் இன மக்களுக்கு சாதி சான்றிதழ் உடனடியாக வழங்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.


பெண் குழந்தைகளுக்கு ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டாலோ, குழந்தை திருமணங்கள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்தாலோ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் குழந்தை பாதுகாப்பு மைய உதவி எண் 1098-ஐ நீங்கள் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்கள்.


இதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் அதிகாலை முதல் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்ட முகாம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் 2வது நாளாக நடைபெற்றது. இத்திட்டத்தின் கீழ், பாப்பிரெட்டிபட்டி வட்டம், பள்ளிப்பட்டியில் உள்ள ஆவின் குளிர்விப்பு நிலையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். 


பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கலந்துரையாடி, தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்கள். இதனை தொடர்ந்து, பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தங்குதடையின்றி குடிநீர் வழங்கப்பட்டு வருவதையும், பாப்பிரெட்டிபட்டி வட்டம், ரங்கம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு வழங்குவதற்காக உணவுகள் தயார் செய்யப்பட்டுவருவதையும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு சுவையாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என சுய உதவிக்குழு மகளிரிடம் தெரிவித்தார்கள்.


பின்னர், பாப்பிரெட்டிபட்டி பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, பேருந்துகளின் இயக்க நேரம் குறித்து கேட்டறிந்தார்கள். "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்றைய தினம் காலை 9.00 மணி முதல் இன்றைய தினம் காலை 9.00 மணி வரை ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் நலனுக்காக தமிழ்நாடு அரசால் அறிவித்து செயல்படுத்தப்படும் அரசின் நலத்திட்டங்கள் கடைக்கோடி பகுதிகளில் வசிக்கும் தகுதியான பொதுமக்களுக்கு கிடைத்திட வேண்டுமெனவும், வளர்ச்சி திட்டப்பணிகள் குறிப்பிட்ட கால அளவிற்குள் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமெனவும், பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் தரமானதாக இருக்க வேண்டுமெனவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார்கள்.


இந்நிகழ்வுகளின் போது ஆவின் பொதுமேலாளர் திருமதி.மாலதி, அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.வில்சன் ராஜசேகர், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.குருராஜன், மாவட்ட அனைத்து துறை முதன்மை அலுவலர்கள், பாப்பிரெட்டிப்பட்டி செயல் அலுவலர் திருமதி.கலைராணி ஆகியோர் கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad