கரகதஅள்ளியில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட, 5000 மெட்ரிக் டன் குளிர் பதன கிடங்கினை முதலமைச்சர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 28 பிப்ரவரி, 2024

கரகதஅள்ளியில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட, 5000 மெட்ரிக் டன் குளிர் பதன கிடங்கினை முதலமைச்சர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கரகதஅள்ளியில், நபார்டு ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து, 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட, 5000 மெட்ரிக் டன் குளிர் பதன கிடங்கினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  இன்று மாலை காணொளி வாயிலாக திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து கிடங்கினை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கவுன்சிலர் தீபா முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், திமுக மத்திய ஒன்றிய செயலாளர் முனியப்பன், வழக்கறிஞர் சந்திரசேகர், ஒன்றிய கவுன்சிலர் லதாராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இதில் பேசிய பேருராட்சி தலைவர் பி.கே.முரளி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான குளிர்பதன கிடங்கினை இன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்துள்ளர். இந்த குளிர்பதன கிடங்கினை சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் வரையில் பாதுகாத்து வைத்திருந்து, உரிய விலை கிடைக்கும் போது விற்பனை செய்து பயன் பெறுமாறு கேட்டுக் கொண்டார்.


இந்நிகழ்ச்சியில் வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறை துணை இயக்குநர் கலைச்செல்வி, செயலாளர் ரவி, தோட்டக்கலை உதவி இயக்குநர் கோமதி, வேளாண்மை அலுவலர் சிவசக்தி, வேளாண்மை உதவி அலுவர் செல்வம், ஒன்றிய கவுன்சிலர் குமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செழியன் மற்றும் விவசாயிகள், கரகத அள்ளி ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad