முன்னாள் படைவீரர்களுக்கான சுயதொழில் முனைவோர் கருத்தரங்கு மற்றும் முன்னாள் படைவீரர்கள் அவர்தம் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைகேட்பு நாள் கூட்டம் 26.02.2024 அன்று மாலை 04.00 மணிக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிட கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.
மேற்படி கூட்டத்தில் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தத்தமது துறையில் உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவுரையாற்றவுள்ளார்கள். சுயதொழில் தொடங்க விரும்பும் முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இக்கூட்டத்தின்போது முன்னாள் படைவீரர்கள் அவரைச் சார்ந்தோர் மற்றும் படையில் பணிப்புரிந்து வருவோரது குடும்பத்தினர் அவர்களது கோரிக்கையினை தனித்தனி மனுக்களாக தெளிவாக எழுதி அடையாள அட்டை நகலுடன் இரட்டைப் பிரதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் நேரில் சமர்ப்பிக்கலாம்.
அத்துடன் முன்னாள் படைவீரர்கள் அசல் படைப்பணி சான்று மற்றும் அடையாள அட்டையுடன் வருகை புரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக