28.02.2024 அன்று மாவட்ட தொழில் மையம் சார்பில் ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் சேமிப்பு ஊக்குவிப்பு திட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 பிப்ரவரி, 2024

28.02.2024 அன்று மாவட்ட தொழில் மையம் சார்பில் ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் சேமிப்பு ஊக்குவிப்பு திட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது.


தருமபுரி மாவட்ட தொழில் மைய அலுவலகத்தால் செயல்படுத்தப்படும், குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கு எரிபொருள்/ஆற்றல் சேமிப்பிற்கான புதிய தொழில்நுட்பங்களைப் பற்றிய  விழிப்புணர்வை       உருவாக்க ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் சேமிப்பு ஊக்குவிப்பு திட்டம் (PEACE), பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு, தருமபுரி  மாவட்டம், ஒட்டப்பட்டியில் உள்ள மாவட்ட தொழில் மைய அலுவலக கூட்டரங்கில்  28.02.2024  அன்று   காலை    10.30 மணிக்கு  நடைபெறவுள்ளது.

போட்டியான இக்காலத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்நிறுவனர்கள் இலாபம் ஈட்ட, சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது இன்றியமையாததாகும். அவ்வகையில் எரிபொருள்/ஆற்றல் சேமிப்பு என்பது  நிறுவனத்தின் இலாபத்தை  அதிகரிப்பதாக அமையும்.  எனவே மின்சாரம், எரிபொருள் கொண்டு இயங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSMEs) ஆற்றல் தணிக்கை மற்றும்      ஆற்றல் சேமிப்பு ஊக்குவிப்பு திட்டம் (PEACE) தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்து கொண்டு இத்திட்டம் பற்றி அறிந்து தங்கள் தொழில்நிறுவனத்தில் அமல்படுத்தி இலாபம் ஈட்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மேலும் விவரங்களுக்கு 89255 33940, 89255 33941, 89255 33942 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளவும். என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad