மாரண்டஅள்ளி சுற்றுவட்டார கிராமங்களில் கோயில் திருவிழா நடைபெற உள்ளதால், அரசு மதுபானகடையை 2 நாள் மூட பொதுமக்கள் கோரிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 10 பிப்ரவரி, 2024

மாரண்டஅள்ளி சுற்றுவட்டார கிராமங்களில் கோயில் திருவிழா நடைபெற உள்ளதால், அரசு மதுபானகடையை 2 நாள் மூட பொதுமக்கள் கோரிக்கை.

 


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள மாரண்டஅள்ளி சுற்றுவட்டார பகுதிகளான அமனிமல்லாபுரம், பாவளி, தொட்ட பாவளி, நல்லூர், பெலமாரனஅள்ளி, சீரியம்பட்டி, ஈச்சம்பள்ளம், கடத்திகொள்மேடு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் ஒன்றினைந்து 15 ஆண்டிற்க்கு ஒரு முறை மண்டுமாரியம்மன் திருவிழா வரும் 14 மற்றும் 15ம் தேதி புதன், வியாழக்கிழமை ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது.


அது சமயம் உள்ளுர், வெளியூர்களிலிருந்து பல இலட்சம் பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்ள உள்ள நிலையில், தேவையற்ற சண்டை, சச்சரவுகள் அடிதடி போன்ற சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதை தவிர்க்க அமானி மல்லாபுரத்தில் செயல்பட்டு வரும். அரசு மதுபானகடையை திருவிழா நடக்கும் 14, 15 ஆகிய இரண்டு தினங்களுக்கு விடுமுறை அளிக்கவும், சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதி இன்றி செயல்படும் சந்து கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad