தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவன கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் நிவரான நிதிக்காக 2 இலட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவன கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் நிவரான நிதிக்காக 2 இலட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.


தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி.சாந்தியிடம், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குகாக, தருமபுரி மாவட்ட தன்னார்வ  தொண்டு நிறுவன கூட்டமைப்பின் சார்பில் அதன்  தலைவர் ஆனந்தன் அவர்கள் 2 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.


தருமபுரி மாவட்ட, தன்னார்வ தொண்டு நிறுவன கூட்டமைப்பு சார்பில் மருத்துவ உதவிகள், பெண் ஊட்டசத்து குறைபாடு, ரத்த சோகை, பெண் சிசுக்கொலை, பெண் கல்வி, ஊனமுற்றோர், முதியோர் நலத்திட்ட உதவி உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர்.


தற்போது மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதரத்தை மீட்டெடுக்கும் வகையில், அவர்களுக்கு உதவிடும் நோக்கில், தருமபுரி மாவட்ட தன்னார்வ  தொண்டு நிறுவன கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் நிவான நிதிக்கு 2 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை தொண்டு நிறுவன கூட்டமைப்பின் தலைவர் ஆனந்தன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் சாந்தியிடம் வழங்கினர்.


அது சமயம் துணை தலைவர்  துரைமணி, பொருளாளர் லதா, பிரதிநிதிகள் சரளா,  ராமசாமி,  தனலட்சுமி,  இளையராஜா, ராஜலிங்கம், செந்தில், ராஜா, மகாதேவையா, கோவிந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad