தருமபுரி மாவட்டம், அரூர் அருகே கொளகம்பட்டி ரோட்டில் வாழைத்தோட்டம் ஊராட்சி ஒன்றியப் பள்ளி அருகில் நேற்றுக் காலை அரூர் காவல் நிலையப் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனையிட்டனர். அதில் மூன்று யூனிட் நொரம்பு மண் இருந்தது.
இதற்கான அனுமதி ஏதும் இல்லாத நிலையில், கொளகம்பட்டியைச் சேர்ந்த காளிமுத்து என்பவரின் விவசாய நிலத்தில் இருந்து கிணறு தோண்டிய நொரம்பு மண்ணை அவரது அனுமதி இன்றி எடுத்து வந்து, அரூர் பகுதியில் விற்பனை செய்தது தெரியவந்தது.இது தொடர்பாக டிப்பர் லாரி ஒட்டுநர் கைது செய்யப்பட்டார் அவர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்தில் நொரம்பு மண்ணை ஏற்றிய ஜேசிபி மற்றும் மேலும் 2 டிப்பர் லாரிகளையும் போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.
மேலும் இது தொடர்பாக ஓட்டுநர்கள் ஹரிஷ்( 27), மூர்த்தி (42), அசோக் (30) ,சுப்பிரமணி (47) ஆகிய 4 பேரைக் கைது செய்தனர். வாகனங்களின் உரிமையாளரான கீரைப்பட்டியைச் சேர்ந்த பொன்னுரங்கம் என்பவரை போலிசார்தேடி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக