மாண்புமிகு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள், மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியினை ஈரோட்டில் இன்று (08.02.2024) தொடங்கி வைத்தார்கள்.
இதனைத் தொடர்ந்து தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் 347 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.32.79 கோடி மதிப்பீட்டில் வங்கிக் கடன் இணைப்புகள், மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி. சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் தருமபுரி மாவட்ட ஊரகப்பகுதியை சேர்ந்த 178 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.20.88 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் இணைப்பு உதவிகளையும், நகரப்பகுதியில் 112 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.11.60 கோடி மதிப்பீட்டில் வங்கி கடன் இணைப்பு உதவிகளையும், 57 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.21.60 இலட்சம் மதிப்பீட்டில் தனிநபர் தொழில்முனைவோர் கடன் உதவிகளையும், 3 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.9.60 இலட்சம் மதிப்பீட்டில் மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள் என மொத்தம் 347 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.32.79 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி. சாந்தி இஆப., அவர்கள் இன்று வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜி.கே.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஷ்வரன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.கோவிந்தசாமி, மகளிர் திட்ட திட்ட இயக்குநர் திரு. சா.பத்ஹூ முகம்மது நசீர், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.கண்ணன், நல்லம்பள்ளி ஒன்றியக் குழு தலைவர் திருமதி.மகேஸ்வரி பெரியசாமி, ஒன்றியக்குழுத் தலைவர்கள், பேரூராட்சிகளின் தலைவர்கள், தடங்கம் ஊராட்சி மன்றத்தலைவர் திருமதி.கவிதா முருகன் உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக