தருமபுரி மாவட்டம், ரோட்டரி ஹாலில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் கல்விக்கடன் வழிகாட்டுதல் நாள் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் இன்று (15.02.2024) நடைபெற்றது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது. தருமபுரி மாவட்டத்தில் 31.03.2023 முடிய 11,625 மாணவர்களுக்கு கல்விக்கடனாக ரூ.261.90 கோடி வங்கிகளால் வழங்கப்பட்டுள்ளது. 01.04.2023 முதல் 31.01.2024 வரை 477 மாணவர்களுக்கு ரூ.24 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த 17.11.2023 அன்று நடைபெற்ற மாபெரும் கல்விக்கடன் மேளாவில் கல்வி கடன் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கடந்த கல்விக்கடன் மேளா விழாவில் 155 மாணவர்கள் வித்யாலஷ்மி போர்ட்டலில் விண்ணப்பம் செய்தார்கள். அன்றைய தினம் 93 மாணவர்களுக்கு ரூ.10.83 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் வித்யாலஷ்மி போர்ட்டலில் 740 மாணவர்கள் கல்விக் கடன் கோரி 31.01.2024 தேதி வரை விண்ணப்பித்துள்ளனர்.
கல்விக்கடனுக்காக விண்ணப்பித்தவர்களில் வங்கிகள் மூலம் 477 மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. கல்விக்கடனுக்காக விண்ணப்பித்தவர்களில் 150 மனுக்கள் வங்கிகளால் வெவ்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டுள்ளது. கல்விக்கடனுக்காக விண்ணப்பித்தவர்களில் 113 மனுக்கள் வங்கிகளின் பரிசீலனையில் உள்ளன. கல்விக்கடன் என்பது மாணவர்களின் முன்னேற்றத்திற்கும், அவர்களின் குடும்பத்தின் பொருளாதார தன்மையை நீக்கி வளர்ச்சி அடைவதற்காகவும் அரசு கல்விக்கடனுக்கு முன்னுரிமை கொடுத்து வருகிறது.
மாணவர்கள் தாங்கள் வாங்கிய கடனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தவும், கல்விக்கடனை அரசு தள்ளுபடி செய்வார்கள் என்ற எண்ணத்தில் கடனை கட்டாமல் இருக்க வேண்டாம், என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்விழாவில் வங்கியாளர்களும், அரசு அதிகாரிகளும், கல்லூரி
நிர்வாகிகளும், மாணவர்களும் கலந்து கொண்டு கல்விக்கடன் குறித்த வழிகாட்டுதல்கள்
வழங்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப.,
அவர்கள் 48 நபர்களுக்கு ரூ.5.25 கோடி மதிப்பில் கல்விக்கடன் பெறுவதற்கான
ஆணைகளை வழங்கினார்கள்.
இவ்விழாவில் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் திருமதி. பத்மாவதி ஸ்ரீகாந்த்,
மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.கே.கண்ணன், மாவட்ட தொழில் மைய பொது
மேலாளர் திரு. பா.கார்த்திகை வாசன், மாவட்ட தொழில் மைய நிதி ஆலோசகர் திரு.
J.C.கிருஷ்ணன், இந்தியன் வங்கி மண்டல அலுவலக முதன்மை மேலாளர் (கல்விக்
கடன்) திருமதி.அகிலம், கனரா வங்கி முதன்மை மேலாளர்
திரு. A.L.மூர்த்தி, பாரத ஸ்டேட் வங்கி துணை கிளை மேலாளர் ரு. A.ராஜகுமரன் , வட்ட
தொழில் மைய தொழிற் கூட்டுறவு அலுவலர் திருமதி. எம்.சுவித்ரா உட்பட
தொடர்புடைய அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள்
கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக