தர்மபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அடுத்துள்ள மாரவாடி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜன் (வயது .69), இவர் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்றி முன்தினம் இரவு தான் வளர்க்கும் ஆடுகளை வீட்டின் முன்பு கட்டி விட்டு, தூங்க சென்றார், நள்ளிரவு சுமார் 1 மணிக்கு ஆடுகள் அலறும் சத்தம் கேட்டது, இவர் வெளியே வந்து பார்த்த போது, 4 பேர் வெள்ளாடு ஒன்றை பிடித்து சொகுசு காரில் கடத்தி செல்வது தெரிய வந்தது, இவர் சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர், ஓடி வந்து காரை துரத்தி சென்றனர்.
அதற்குள் கார் வேகமாக சென்று மறைந்துவிட்டது. இது குறித்து ராஜன் கொடுத்த புகாரின் பேரில் மகேந்திமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் நேற்று சாமானூரை சேர்ந்த நவீன்குமார் (வயது. 21), கொலசன அள்ளியை சேர்ந்த மனோஜ்குமார் (வயது. 20), பொம்மனூர் கிராமத்தை சேர்ந்த சுனில் குமார் (வயது. 20) பொம்மனூரை சேர்ந்த 19 வயது சிறுவன் ஆகிய 4 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த திருடப்பட்ட ஆட்டை மீட்டனர்.
4 பேரும் தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருவது குறிப்பிடதக்கது. 4 பேரையும் பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக