பாலக்கோடு ஸ்ரீ புதூர்மாரியம்மன் 56ம் ஆண்டு கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 12 பிப்ரவரி, 2024

பாலக்கோடு ஸ்ரீ புதூர்மாரியம்மன் 56ம் ஆண்டு கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற  ஸ்ரீபுதூர்மாரியம்மன் கோவில் திருவிழா பாரம்பரிய முறைப்படி, ஒவ்வொரு வருடமும் மாசிமாதம், பெளர்ணமியை முன்னிட்டு வெகு விமர்சையாக  நடைபெறுவது வழக்கம், இந்த ஆண்டு  வரும் பிப்ரவரி மாதம் 19ம் தே தொடங்கி 23ம் தேதி வரை கோயில்  திருவிழா நடைப்பெறுவதையொட்டி ஸ்ரீபுதூர்மாரியம்மன் கோயில் வளாகத்தில் பாரம்பரிய முறைப்படி பூஜை செய்து பந்தக்கால் நட்டு கொடியேற்றி விழாவினை ஊர் கவுண்டர் முருகேசன்  துவக்கி வைத்தார். முன்னதாக ஸ்ரீபுதூர்மாரியம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்நிகழ்ச்சியில் மந்திரி கவுண்டர்கள் மாதையன்.முனியப்பன், தர்மகர்த்தா ராஜீ, தொட்டம்பட்டி ஊர் கவுண்டர்  முனியப்பன், பேளாரஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன், கோம்பு தலைவர்கள் ராஜா, முருகேசன், கனேசன் , ராஜா, ஆறுமுகம், குப்பன், ஸ்ரீபச்சியம்மன்  இளைஞர் நற்பணி மன்ற தலைவர் குமார், செயலாளர் ராஜா, துணை செயலாளர் பெருமாள், பொருளாார் சத்யமூர்த்தி, மற்றும் வடிவேல், அர்ஜூனன் உள்ளிட்ட நிர்வாகிகள் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad