பாலக்கோடு ஸ்ரீ புதூர் மாரியம்மன் கோயில் உண்டியலில் 6 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், 44 கிராம் தங்கம், வெள்ளி பொருட்கள் 164 கிராம் காணிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 28 பிப்ரவரி, 2024

பாலக்கோடு ஸ்ரீ புதூர் மாரியம்மன் கோயில் உண்டியலில் 6 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், 44 கிராம் தங்கம், வெள்ளி பொருட்கள் 164 கிராம் காணிக்கை.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஸ்ரீபுதூர் மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் 19ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை நடைப்பெற்றது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு உள்ளுர், வெளியூர், வெளி மாநிலத்திலிருந்து இலட்சகணக்கான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் அலகு குத்தியும், தீச்சட்டி, பூ கரகம்,  பால்குடம் எடுத்தும், பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.


திருவிழாவினை முன்னிட்டு பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகளும், பட்டிமன்றமும் நடந்தன. திருவிழா நிறைவு பெற்றதை முன்னிட்டு கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய  காணிக்கையை எண்ணும் பணி கோயில் ஆய்வாளர் துரை, செயல் அலுவலர் சித்ரா ஆகியோர் முன்னிலையில் கோயில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டது.


இதில் 6இலட்சத்து 46 ஆயிரத்து 770 ரூபாய் ரொக்கமும், தங்கம் 44 கிராம், வெள்ளி பொருட்கள் 164 கிராம்  காணிக்கையாக கிடைத்தன. வசூலான காணிக்கை பணம் மற்றும் தங்கம், வெள்ளி பொருட்களை கோயில் அதிகாரிகள்  கரூவூலத்தில் செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad