மாவட்டத்திலுள்ள அனைத்துத் துறை/வாரியம், கழகம், தன்னாட்சி நிறுவனங்களிலிருந்து அலுவலர் ஒருவர் மற்றும் பணியாளர் தொகுதி பொறுப்பு வகிக்கும் கண்காணிப்பாளர் (அ) உதவியாளர் (அ) தட்டச்சர் நிலையில் ஒருவர் என இருவர் இரண்டு நாள்கள் நடைபெறும் ஆட்சிமொழிப் பயிரங்கத்திலும் 07.02.2024 பிற்பகல் 03.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் ஆட்சிமொழிக் கருத்தரங்கில் மாவட்ட நிலை அலுவலர்கள், கோட்ட அலுவலர்கள், வட்ட நிலை அலுவலர்கள், பல்வேறு துறை அலுவலகங்களின் அலுவலர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும். பயிலரங்கத்தின் வாயிலாக ஆட்சிமொழித்திட்டத்தின் இன்றியமையாமை, திட்டச் செயலாக்கம், செயலாக்கத்தின் பல்வேறு நிலைகள் , அரசு அலுவலர் மற்றும் பணியாளர்கள் அனைவரும் தமிழில் மட்டுமே ஒப்பம், சுருக்கொப்பமிட வேண்டும் என்பது முதல் அனைத்து நிலைகளுக்குமான ஆட்சிமொழித் திட்ட அரசாணைகள் மற்றும் பட்டறிவும் எடுத்துரைக்கப்படும்.
தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்துத் துறை அரசு அலுவலர் மற்றும் பணியாளர்கள் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக