கர்நாடகா தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுளுவில் திடீரென நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு தொடர்ந்து 700 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகா அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து காவிரியாற்றின் வழியாக உபரிநீர் வெளியேற்றப்டுவது தொடர்ந்து குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடகா மற்றும் தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுளுவில் நீர்வரத்தும் படிப்படியாக குறைந்துக்கொண்டே வந்த நிலையில் நேற்று முன்தினம்வரை வினாடிக்கு 300 கனஅடியாக நீடித்து வந்தன. நேற்று காலை நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 400 கன அடியாக நீடித்து வந்தன. இன்று தொடர்ந்து நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து தற்போது வினாடிக்கு 700 கன அடியாக நீடித்து வருகிறது. இந்த நீர் வரத்தால் ஐந்தருவி, சினி ஃபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டிசெல்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக