பாலக்கோடு அடுத்த ஜக்கசமுத்திரம் கிராமத்தில் தறிகெட்டு ஓடிய சரக்கு லாரி மோதி 8 மின் கம்பங்கள் சேதம் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

பாலக்கோடு அடுத்த ஜக்கசமுத்திரம் கிராமத்தில் தறிகெட்டு ஓடிய சரக்கு லாரி மோதி 8 மின் கம்பங்கள் சேதம் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த ஜக்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த ஓட்டுநர் திருமூர்த்தி (40) இவர் தனக்கு சொந்தமான சரக்கு லாரியில் நேற்று மாலை அதிக அளவிலான பாரத்தை ஏற்றி கொண்டு மல்லுப்பட்டி கிராமத்தில் இருந்து மாண்டஅள்ளி நோக்கி நேற்று  சென்று கொண்டிருந்த போது  ஜக்கசமுத்திரம் ஊருக்கு நடுவே  செல்லும் போது லாரி தறிகெட்டு ஓடிய நிலையில் பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். மேலும் ஜக்கசமுத்திரம் விநாயகர் கோயில் முதல் கூட்டுறவு வங்கி வரை  ஒன்றின்பின் ஒன்றாக சாலையோரம் இருந்த 8 மின் கம்பங்கள் மீது  மோதி இரண்டாக உடைந்து சாய்ந்து உள்ளது. அருகில் இருந்த கூரை வீட்டின் மீதும் விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள்  உயிர் தப்பினர்.


இது குறித்து ஜக்கசமுத்திரம் மின்வாரியத்திற்க்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவத்தனர், உடனடியாக மின்சப்ளையை துண்டித்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்க்கு சென்று சாய்ந்த மின்கம்பங்களை, சரி செய்யும் பணியில்  ஈடுபட்டு வருகின்றனர்.


தற்போது  10, மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு செயல்முறை தேர்வு நடைப்பெற்று வருவதால் மின்சாரம் இன்றி கடந்த 2 நாட்களாக  மாணவ மாணவிகள் படிக்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆனால் இச்சம்பவம் குறித்து இதுவரை மின் வாரியம் சார்பிலும், காவல் துறை சார்பிலும் எந்த ஒரு புகாரும் பதிவு செய்யவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad