தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்துள்ள பி.கொல்ல அள்ளி கிராமத்தை கிராமத்தை சேர்ந்த விவசாயி நாகராஜ் (வயது.45) இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார்.
நேற்றிரவு வீட்டின் அருகில் உள்ள ஆட்டுப் பட்டியில் தனது ஆடுகளை கட்டி விட்டு தூங்க சென்றார். விடியற்காலை 3 மணிக்கு ஆட்டுபட்டியில் இருந்து ஆடுகள் அலறல் சத்தம் கேட்டது. வெளியே சென்று பார்த்த போது மர்ம விலங்கு கடித்து 9 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தது தெரிய வந்தது.
இது குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு வனத்துறையினர் மற்றும் வனத்துறை மருத்துவர் சம்பவ இடத்திற்க்கு சென்று இறந்த செம்மறி ஆடுகளை பிரேத பரிசோதனை செய்து அப்பகுதியில் குழி தோண்டி புதைத்தனர். செம்மறி ஆடுகளை கடித்து கொன்ற மர்ம விலங்குகள் குறித்து பாலக்கோடு வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக