ஆனால், அன்றைய தினம் அரசு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டவாறு நடைபெறும் எனவும், பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள், தேர்வுப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளுர் விடுமுறை பொருந்தாது என அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுகட்டும் வகையில் 16.03.2024. (சனிக்கிழமையன்று) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலாவணி முறிச் சட்டம், 1881 (under Negotiable Instruments Act, 1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், உள்ளூர் விடுமுறை நாளன்று, அரூர் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட சார்நிலைக் கருவூலங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக