உலக அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தினம் பிப்ரவரி 27ஆம் தேதி உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில் மை தருமபுரி தொண்டு நிறுவனத்தின் நிறுவனத்தலைவர் சதீஸ் குமார் ராஜா அவர்கள் 83 ஆவது முறையாக தட்டணுக்கள் தானம் வழங்கினார்.
இதுவரை 45 முறை இரத்ததானமும், 38 முறை தட்டணுக்கள் தானமும் வழங்கியுள்ளார். மை தருமபுரி தொண்டு நிறுவனத்தின் மூலம் தினந்தோறும் உணவு சேவை, ஆதரவற்று இறந்தவர்களின் புனித உடல்கள் நல்லடக்கம், இரத்ததான சேவை, கல்வி சேவை ஆகியவை சிறப்பாக செய்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக