உயிரியல் மற்றும் ஆற்றல் பயன்பாடுகளுக்கான நிலையான பொருட்கள் பற்றிய சர்வதேச மாநாடு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 1 பிப்ரவரி, 2024

உயிரியல் மற்றும் ஆற்றல் பயன்பாடுகளுக்கான நிலையான பொருட்கள் பற்றிய சர்வதேச மாநாடு.


பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் இயற்பியல் துறை சார்பாக இளவேனில் அறிவியல் சங்கம் சென்னையுடன் இணைந்து, "உயிரியல் மற்றும் ஆற்றல் பயன்பாடுகளுக்கான நிலையான பொருட்கள்" பற்றிய சர்வதேச மாநாடு பெரியார் பல்கலைக்கழக பட்டம் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முனைவர் மோகனசுந்தரம் அவர்கள்  தலைமை உரையில் இன்றைய தேவைக்கான புதுப்பிக்கப்பட்ட கூடிய ஆற்றல்களின் முக்கியம் மற்றும் அது சம்பந்தமான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு இது ஒரு சிறந்த கருத்தரங்கம் ஆகும் என்றார் மேலும் துவக்கம் மற்றும் சிறப்புரையில் பேராசிரியர் முனைவர் ராமசாமி அவர்கள் சோலார் செல் உற்பத்தி மற்றும் பயன்பாடு குறித்து விளக்கம் அளித்தார் கருத்தரங்க பேருரையில் சென்னை கணித அறிவியல் நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் ரவீந்திரன் அவர்கள் குவாண்டம் இயக்கவியல் பயன்பாடுகள் என்ற நவீன சாதனைகளை இன்றைய வளர்ச்சிகள் குறித்து விளக்கம் அளித்தார்.


முன்னதாக இயற்பியல் துறை தலைவரும் பேராசிரியர் முனைவர் செல்வ பாண்டியன் அவர்கள் கருத்தரங்கம் மற்றும் துறை நிகழ்வுகள் பற்றி எடுத்துரைத்து அனைவரையும் வரவேற்றார், இறுதியாக உதவி பேராசிரியர் மற்றும் கருத்தரங்க அமைப்பாளர் முனைவர் பிரஷாந்த் கருத்தரங்கு நோக்கத்தினை எடுத்துரைத்து நன்றி கூறினார் கருத்தரங்கில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியர் சிவகுமார் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரமேஷ் பாபு எஸ் எஸ் என் கல்லூரி நிறுவனத்தின் சீனிவாசன் செந்தில் பாண்டியன் சந்திரசேகர் பெரியார் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் கல்யாணசுந்தரம், ரமேஷ் உத்திரமேரூர் அரசு கல்லூரி உதவி பேராசிரியர் முத்து கிருஷ்ணகிரி அரசு கல்லூரி உதவி பேராசிரியர் ராபர்ட் அழகப்பா பல்கலைக்கழகம் உதவி பேராசிரியர் சுபா தேவி தேவி சென்னை பச்சையாபாஸ் கல்லூரி உதவி பேராசிரியர் சிவனேசன் சாஜன் கேரளா பிஷப் கல்லூரி முனைவர் சாஜன் பாரதியார் பல்கலைக்கழகம் முனைவர் சங்கர் திருச்சி பொறியியல் கல்லூரி முனைவர் வெற்றிவேல் மற்றும் பெரியார் பல்கலைக்கழக பட்டம் மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் கௌரவ விரிவுரையாளர்கள் கோபாலகிருஷ்ணன் மற்றும் செந்தில் இயற்பியல் துறை மாணவிகள் கோகுல பிரியா, வினோதினி, மோனிகா ஆகிய மாணவிகள் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.


இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை இயற்பியல் துறை மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர் மேலும் இந்நிகழ்வில் கர்நாடகா கர்நாடகா கேரளா ஆந்திரா பாண்டிச்சேரி மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர் தங்களுடைய கட்டுரைகளை வழங்கினார்கள்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad