அரூர் அருகே கூலி வேலைக்காக சென்ற தாழ்த்தப்பட்ட வயது முதிர்ந்த பெண்களுக்கு கொட்டாங்குச்சியில் டீ கொடுத்த விவகாரம் - எஸ்சி எஸ்டி ஆக்ட் பிரிவின் கீழ் மாமியார் மருமகள் கைது.
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த போளையம்பள்ளி கிராமத்தில் இருந்து ஐந்து தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த வயது முதிர்ந்த பெண்கள் மாரப்ப நாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள உயர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் விவசாய நிலத்தில் கூலி வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது வேலை செய்த பெண்களுக்கு தோட்டத்தின் உரிமையாளர்கள் கொட்டாங்குச்சியில் டீ கொடுத்ததாகவும், தோட்டத்தின் உரிமையாளருக்கு மட்டும் சில்வர் டம்ளரில் டீ கொடுத்ததாகவும் கூறப்பட்ட வீடியோ வெளியாகியது.
இந்தத் தகவல் பரபரப்பாகி உள்ள நிலையில் கூலி வேலை செய்த தாழ்த்தப்பட்ட வயது முதிர்ந்தவர்களுக்கு கொட்டாங்குச்சியில் டீ கொடுத்த மாமியார் சின்னத்தாய் மற்றும் மருமகள் தரணி ஆகிய இருவரை கைது செய்து எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக