ஜக்கசமுத்திரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் இலவச வீட்டுமனை பட்டாக்களுக்கு நிலம் அளந்து கொடுக்க தமிழக முதல்வருக்கு கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ. கோரிக்கை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 28 பிப்ரவரி, 2024

ஜக்கசமுத்திரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் இலவச வீட்டுமனை பட்டாக்களுக்கு நிலம் அளந்து கொடுக்க தமிழக முதல்வருக்கு கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ. கோரிக்கை.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த, ஜக்கசமுத்திரம் கிராமத்தில் வருவாய்த்துறை சார்பில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் சாந்தி  தலைமையில்  நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பிணர் சாந்தி பெரியண்னன், ஒன்றிய கவுன்சிலர் தீபா முருகன், ஊராட்சி மன்ற தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதல் சிறப்பு விருந்தினராக பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன்  கலந்து கொண்டு 78 இலட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 227 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்ட சத்து அடங்கிய தொகுப்பு, சலவைபெட்டி, உள்ளிட்ட  நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது, கடந்த 2016 முதல் 2023  வரை ஏழைகளுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாக்களுக்கு நிலம் அளந்து ஒதுக்கீடு செய்யாததால், வீடு இன்றி ஏழை, எளிய, பொதுமக்கள் தவித்து வருகின்றனர். எனவே தமிழக முதல்வர் உடனடியாக இலவச வீட்டுமனை பட்டாக்களுக்கு நிலம் அளந்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.


இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி, துணைஆட்சியர் தனப்பிரியா,  ராஜ்குமார், வேளாண்மை துணை இயக்குநர்கள் தேன்மொழி, சித்ரா, உதவி இயக்குநர் புவனேஸ்வரி, தாசில்தார் ஆறுமுகம், மருத்துவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad