கும்மனுர் அடுத்த இராசிக்குட்டை சாலையில் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட முயன்றவர்களை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 26 பிப்ரவரி, 2024

கும்மனுர் அடுத்த இராசிக்குட்டை சாலையில் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட முயன்றவர்களை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம், கும்மனூர் ஊராட்சியில் உள்ள இராசிக்குட்டை கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் அப்பகுதியை சேர்ந்த சிலர் குடியிருந்து வந்தனர், கடந்த 3 வருடத்திற்க்கு முன்பு, தமிழக அரசின் சார்பில் உணவு பூங்கா அமைக்க, அப்பகுதியில் உள்ள 9 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது, அதனை ஏற்று அங்கு குடியிருந்தவர்கள் இடத்தை காலி செய்து அரசிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் சின்ன கும்மனூர்காலணி, வளைகாரப்பட்டி,  படகாண்டகாலணி, ஜனப்பனூர் காலனி  ஆகிய பகுதிகளை சேர்ந்த 400க்கும் மேற்பட்டோர், உணவு பூங்கா தொடங்காததால் அந்த இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்ட மூங்கில், தென்னைஓலை, கடப்பாரை ஆகியவற்றுடன், இன்று காலை குவிந்தனர்.


இதனை கண்ட இராசிக்குட்டையை சேர்ந்தவர்கள் இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த இடத்தில் ஆக்கிரமித்து கொட்டகை அமைக்க கூடாது என கூறி 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த மாரண்டஅள்ளி இன்ஸ்பெக்டர் சுப்ரமணி, துணை தாசில்தார் ஜெகதீசன், வருவாய் ஆய்வாளர் வெங்கடாசலம் ஆகியோர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து ஆக்கிமிப்பாளர்களை எச்சரிக்கை செய்து அகற்றினர்.


அதனை தொடர்ந்து அப்பகுதியினர் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் திடிர் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad