வீட்டு உரிமையாளர்கள், இடம் மட்டும் தந்தால் போதும், அந்த இடத்தில் குழி வெட்டி மரங்களை நட்டு தரும் சேவையை தாங்களே முன்நின்று நடத்த உள்ளனர். அதற்கான துவக்க விழா இன்று ஏரியூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு சிகரல அள்ளி இயற்கை ஆர்வலர் து.முத்துக்குமார் வரவேற்று பேசினார். தமிழ் ஆர்வலர் நா.நாகராஜ் முன்னிலை வகித்தார்.
நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக ஏரியூர் காவல் ஆய்வாளர் வெ.யுவராஜன் மற்றும் ஏரியூர் ஒன்றிய குழு தலைவர் பழனிச்சாமி ஆகியோர் பங்கேற்றனர்.
ஏரியூர் காவல் ஆய்வாளர் யுவராஜன் அவர்கள் இலவச மரக்கன்றுகளை வழங்கும் நிகழ்வையும் இருசக்கர வாகன விழிப்புணர்வு யாத்திரையையும் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில் " இயற்கை வளத்தை பாதுகாப்பது நமது கடைமை, வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பது அவசியமானதாக இருக்க வேண்டும் மேலும் நமது இயற்கை வளத்தை பாதுகாத்து பூமியை இன்னும் வளப்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்த்து நமது பூமியை பாதுக்காக்க வேண்டும். கால நிலை மாற்றத்தை போக்க மரக்கன்றுகள் வளர்க்க வேண்டும். என உரையாற்றினார்.
ஏரியூர் ஒன்றிய குழுத் தலைவர் பழனிச்சாமி, இலவச மஞ்சப்பை வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், வீடுகள் தோறும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வை முன்னெடுத்துள்ள இளைஞர்களை பாராட்டுகிறேன். சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒவ்வொருவருக்கும் சமூக அக்கறை உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும், பிளாஸ்டிக் கவர்களை முழுமையாக தவிர்க்க வேண்டும் மஞ்சப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்றார்."
நாட்டு கொய்யா, மாதுளை, மகிழம், செண்பகம், கொய்யா, மா உள்ளிட்ட 200 மேற்பட்ட மரக்கன்றுகளை வழங்கினர். நிறைவாக கோ.வைரம் நன்றியுரை கூறினார்.
சிகரல அள்ளி இளைஞர்கள் மா.கிருஷணன், இரா.ரகுராமன், அ.குமார், மாதேஷ், இராஜ்குமார், வெங்கடாசலம், கேசவன், சென்றாயன், சரண், ஜெயபிராகாஷ், மருத்துவர் முனுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஏரியூர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகள் மற்றும் மஞ்சப்பைகளை வாங்கிச் சென்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக