கிறித்துவர்கள் நலவாரியத்தில், அலுவலர் சாரா உறுப்பினர்களை நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. - மாவட்ட ஆட்சியர் தகவல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 2 பிப்ரவரி, 2024

கிறித்துவர்கள் நலவாரியத்தில், அலுவலர் சாரா உறுப்பினர்களை நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. - மாவட்ட ஆட்சியர் தகவல்.


கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களைக் கொண்ட நலவாரியத்தில், அலுவலர் சாரா உறுப்பினர்களை நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல் இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது. கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களைக் கொண்டு நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நலவாரியத்தின் மூலம் நலவாரிய உறுப்பினர்களுக்கு விபத்து நிவாரணம், கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 


மேற்படி நலவாரியத்தில், அலுவலர் சாரா உறுப்பினர்களை நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர், கிறித்துவ மதத்தைச் சேர்ந்த, சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் மற்றும் சமுதாய முன்னேற்றத்தில் அக்கறை உடையவர்களாக இருத்தல் வேண்டும். 


எனவே, விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விபரக் குறிப்புகளுடன் (பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி,வயது, முகவரி, கிறித்துவர் என்பதற்கான சான்று, தற்போதைய முகவரி, ஆதார்எண், கல்வித்தகுதி, தொழில், குடும்ப உறுப்பினர் விவரம், தொலைப்பேசி எண், ஆற்றிய சேவை) (Bio Data) அடங்கிய விவரங்களுடன் மூன்று பிரதிகளில் விண்ணப்பித்தல் வேண்டும். தகுதியான விண்ணப்பங்கள் அரசுக்கு பரிந்துரை செய்து அனுப்பப்படும்.


மேலும் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி பயனடையலாம். இவ்வாறு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad