பாலக்கோடு சுற்றுவட்டார பகுதியில் காலதாமதமாக பூத்த மா பூக்கள் - விளைச்சல் பாதிக்கும் என மாங்காய் விவசாயிகள் கவலை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 17 பிப்ரவரி, 2024

பாலக்கோடு சுற்றுவட்டார பகுதியில் காலதாமதமாக பூத்த மா பூக்கள் - விளைச்சல் பாதிக்கும் என மாங்காய் விவசாயிகள் கவலை.


தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதியில் சுமார் 10ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. டிசம்பர், ஜனவரி மாதத்தில் வழக்கமாக மா மரங்கள் பூ  பூக்கும், ஆனால் நடப்பு பருவத்தில், சீதோசன நிலை மாற்றத்தால் இரண்டு மாதம் காலதாமதமாக பிப்ரவரி மாதத்தில் மா பூக்கள் பூக்க தொடங்கியுள்ளன. இதனால், கோடை வெயில், பனிபொழிவு உள்ளிட்ட காரணங்களால் விளைச்சல் கடுமையாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


மேலும் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், ஜிட்டாண்டஅள்ளி, அண்ணாமலைஅள்ளி, குண்டாங்காடு போன்ற பகுதியில் செந்துரா, பெங்களூரா, அல்போன்சா, பீத்தர், மல்கோவா, நீலம், பங்கன்பள்ளி போன்ற 30க்கும் மேற்பட்ட மாம்பழவகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றது.


இங்கு விளையும் மாம்பழங்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்து வருகின்றனர். அதே போல் மா வகைகளை கொண்டு மாங்கூழ் தயார் செய்ய 10க்கும் மேற்பட்ட தொழில்சாலைகள் பாலக்கோடு சுற்று வட்டார பகுதியில்  இயங்கி வருகின்றது. தற்போது  மா உற்பத்தி கடுமையாக பாதிக்கும் சூழ்நிலையில் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad