காளப்பன அள்ளி பஞ்சாயத்தில், காளப்பன அள்ளி புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அங்கன்வாடி மையம் புதியதாக கட்ட பணிகள் துவங்கி உள்ளது, அதில் தரமற்ற பொருட்களை கொண்டு பணிகள் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர், இது குறித்து அவர்கள் கூறுகையில், அங்கன்வாடி மையம் கட்ட கட்டுமான பொருட்கள் இறக்கி உள்ளனர், இதில் Msand க்கு பதிலாக Bore Dust / Sand Dust ஐ இறக்கி, அதை மறைப்பதற்காக Dust மீது Msand கொட்டி Bore Dust ஐ மறைத்து முழுவதும் Msand கொட்டியது போல கணக்கு காமித்து, அந்த Bore Dust ஐ பயன்படுத்தி அங்கன்வாடி மையம் கட்ட பில்லர் குழி ( பில்லர் ) கட்டிவிட்டணர். இதை மேஸ்திரி இடம் கேட்ட பொழுது, தவறுதலாக Dust கொட்டியதாகவும் 5 பில்லர் தான் கட்டியுள்ளோம் என்றும், இந்த Dust ஐ எடுத்து விட்டு இனி சரியாக செய்வோம் என்று ஒப்புதல் கொடுத்துள்ளனர்.
Msand கொட்டியது போல, Dust ஐ கொட்டி அதை மறைக்க Dust மீது Msand கொட்டி, வேண்டுமென்றே தெரிந்தே தவறு /ஊழல் செய்யும் நோக்கில் இந்த செயலை செய்துள்ளனர். இது குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் என்றும் பார்க்காமல், மனசாட்சி இல்லாமல் பணத்தை மீதம் செய்யும் நோக்கில் தரத்தை குறைத்து குழந்தைகள் நலன் பார்க்காமல் இவ்வாறு செய்த பணியை அரசு பொறியாளர்களை வைத்து Quality Testing செய்து, ஏற்கனவே கட்டப்பட்ட 5 பில்லர்ஐ தரம் டெஸ்டிங் செய்ய வேண்டும் என்று ஊர் பொது மக்கள் சார்பாக மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
இந்த அங்கன்வாடி மையம் கட்ட ஒப்பந்தம் எடுத்த அதே நபர் தான் எங்களின் பஞ்சாயத்தில் உள்ள அனைத்து பொது பணி வேலைகளையும் செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. எனவே கடந்த ஒரு வருடமாக எங்களின் பஞ்சாயத்தில் செய்த அனைத்து பொது பணியையும் தரம் check செய்ய வேண்டும் என்பதை எங்களின் ஊர் மக்கள் சார்பாக மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேம். என அவர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக