தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பாப்பாரப்பட்டி அடுத்த பாலவாடி கிராமத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நியாயவிலை கடைகளில் இந்தோனேசியா மலேசியா இறக்குமதியாகும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் கடலை எண்ணெய் எள் எண்ணெய் கொடுக்கவும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் தொடர்ந்து நான்காவது நாளாக நடைபெற்று வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக அரசை கண்டித்து இன்று பாலவாடி கிராமத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கருப்புக்கொடி ஏந்தி 20க்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டம் நடத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதில் நல்லம்பள்ளி மேற்கு மாவட்ட ஒன்றிய செயலாளர் ஜம்பேரி மாவட்ட பொருளாளர் சக்திவேல் மாவட்ட அமைப்பு செயலாளர் மணி கெயில் அணி தலைவர் பாண்டு பூ மலர்கள் அணி செயலாளர் பூஞ்சோலை மற்றும் சண்முகம் கோபி ரங்கநாதன் முருகேசன் மற்றும் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக