தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் காட்டம்பட்டி கிராமத்தில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் மக்களை தேடி மருத்துவ முகாம் நடைப்பெற்றது.
கிராம மக்களின் உடலில் உள்ள நோய்களை அவர்களின் இடத்திற்க்கே சென்று பரிசோதனை செய்து நோய் கண்டறியப்பட்டால் உடனடியாக சிகிச்சை வழங்கி நோய் குணமாக்கும் வகையில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தினை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
அதன்படி மருத்துவர், செவிலியர் அடங்கிய மருத்துவ குழுவினர் ஒவ்வொரு கிராமத்திற்க்கும் சென்று நோய் உள்ளவர்களை கண்டறிந்து சிகிச்சையளித்து வருகின்றனர். அதனை தொடர்ந்து, காட்டம்பட்டி கிராமத்தில் மக்களை தேடி மருத்துவ முகாம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பிணர் முத்தப்பன் தலைமையில் நடைப்பெற்றது.
இதில் மருத்துவர் புவனேஸ்வரி, செவிலியர்கள் ஜோதி, வினிதா, விஜயலட்சுமி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் அப்பகுதியில் உள்ள சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்களில் உள்ள மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து உடல்நல குறைபாடு உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்தனர்.
அதனை தொடர்ந்து பொதுமக்கள் நோயில்லா கிராமம் உருவாக்குவோம் என உறுதி மொழி ஏற்று கொண்டனர். இம்முகாமில் திமுக கிளை செயலாளர்கள் குள்ளம்மாள், ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக