பேளாரஅள்ளி பேருந்து நிறுத்தம் அருகே அனுமதியின்றி கருங்கல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 15 பிப்ரவரி, 2024

பேளாரஅள்ளி பேருந்து நிறுத்தம் அருகே அனுமதியின்றி கருங்கல் ஏற்றி வந்த டிராக்டர் பறிமுதல்.


தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் அனுமதி இன்றி சட்டவிரோதமாக நொரம்பு மண், கருங்கற்கள் கடத்துவதாக பாலக்கோடு போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது இதையடுத்து போலீசார்,  நேற்று விடியற்காலை பாலக்கோடு அடுத்த பேளாரஅள்ளியில், தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது போலீசாரை கண்டதும் டிரைவர்  டிராக்டரை நிறுத்தி விட்டு தப்பி ஓட்டம் பிடித்தார்.

டிராக்டரை சோதனை செய்ததில் அனுமதி இன்றி கருங்கற்கள் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து 3 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள டிராக்டரை கருங்கல்லுடன் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரனை செய்ததில் கடமடையை சேர்ந்த வேலு (வயது.38) என்பது தெரிய வந்தது. தப்பி ஓடிய டிராக்டர் டிரைவரை போலீசார்  தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad