பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 15 பிப்ரவரி, 2024

பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாசில்தார், அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காவல்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் வட்ட செயலாளர் ராமசந்திரன் தலைமையில் நடைபெற்றது, வட்டக் குழு தோழர்கள் நக்கீரன், சந்திரசேகரன், கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பிணர் நாகராசன் ஆகியோர் ஆற்றிய கண்டன உரையில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் துரை என்பவரை கடந்த 8ம் தேதி பொய் வழக்கில் கைது செய்து, சாத்தான்குளம் சம்பவம் போல், காவல் நிலையத்தில் வைத்து சித்தவதை செய்த காவல் ஆய்வாளர் சுப்ரமணி, காவல் உதவி ஆய்வாளர் ஜீவானந்தம், கார் ஓட்டுநர் சம்பத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த காரல் மார்க்ஸ், ராஜா, கலாவதி, பாண்டியம்மாள், முருகன், ஆறுமுகம், சமது , வரதராஜன், கோவிந்தராஜ், சக்திவேல் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad