ரேஷன் கடைகளில் இந்தோனேசியா மலேசியா பாமாயிலுக்கு பதிலாக, விவசாயிகள் இங்கு விளைவிக்கும் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் வழங்க வேண்டும். திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியாக, தேங்காய் எண்ணெயை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து நியாய விலை கடைகளில் விற்பனை செய்யப்படும் என உறுதி அளித்ததை நிறைவேற்ற வேண்டும். தேங்காய்க்கு கட்டுபடியான விலை வழங்க வேண்டும்.
கொப்பரைத் தேங்காய்க்கு கூடுதலான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும், அமைச்சர்களை சந்தித்து பேசியும், உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, தர்மபுரி ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன கோஷங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக