தப்பியோடியுள்ள கள்ளக்குறிச்சியை சேர்ந்த வடிவேலு, கள்ளக்குறிச்சியில் ஏழு ஏக்கர் விவசாய நிலத்தில் நீச்சல் குளத்துடன் சொகுசு பங்களா, ஆடம்பர கார்கள், பல்வேறு இடங்களில் நிலங்கள், கட்டிடங்கள் என வாங்கி குவித்திருப்பதாகவும், ஏற்கனவே மூன்று முறை கைதாகி சிறைக்கு சென்று வெளியே வந்த வடிவேலு தொடர்ந்து இதே பணியை செய்து வருவதாகவும், பெரிய சிரமமின்றி ஒரு நாளைக்கு இரண்டு லட்சத்திலிருந்து மூன்று லட்ச ரூபாய் வரை பணம் கிடைத்து விடுவதால் மீண்டும் மீண்டும் இந்த வேலையில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்திருக்கிறது..
கருவிலிக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? ஏன் கண்டறிகிறார்கள் என அதிகாரிகளிடம் கேட்ட போது, தொடர்ந்து பெண் குழந்தைகளாக பிறப்பதும், ஆண் குழந்தைக்காக கருவிலிருக்கும் குழந்தை பாலினம் என்ன என்பதை கண்டறிந்து கொள்ள இது போன்ற வழிகளை நாடுவதாகவும், பெண் சிசுவை அழிப்பது தொடருமானால் ஆண்களுக்கு திருமணத்திற்கு பெண் கிடைப்பதே அரிதாகும் நிலை ஏற்படும், எனினும் இது சட்டப்படி குற்றச்செயல், குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது சட்டபடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பெண் சிசுவை கருவிலேயே அழிப்பதற்கு வறுமை ஒரு காரணமா என கேட்டபோது, வறுமை ஒரு காரணமே இல்லை, தொடர்ந்து பெண் குழந்தைகளாக பிறப்பதும், ஆண் குழந்தை வேண்டும் என ஏங்குவோர், இது போன்ற சட்ட விரோத கும்பலை நாடுகின்றனர், பெண் சிசு என தெரிந்து அதை அழிக்கும் போது பெண் மரணிக்கும் சம்பவங்களும் ஏற்படுகிறது, மருத்துவமே படிக்காமல் பணத்திற்காக சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்கின்றனர் அதிகாரிகள், கர்ப்பிணி பெண்களை குறிவைத்து பாலினம் கண்டறியும் கும்பல், நெட்வொர்க் அமைத்து சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது குறிப்பிடதக்கது.
தலைமறைவாகியுள்ள வடிவேலு டிப்ளமோ படிப்பு படித்துவிட்டு கள்ளக்குறிச்சியில் மெடிக்கல் ஸ்டோர் ஒன்றினை நடத்தி வருவதாகவும், பாலினம் கண்டறிவதில் பெரிய முதலீடுகளோ, சிரமமோ இன்றி பணம் வருவதை ருசி கண்டு தொடர்ந்து இது போன்ற குற்ற செயலில் ஈடுபட்டு வருவதும், குண்டர் சட்டம் போன்ற சட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டிய நபராக இருக்கிறார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக