மாரன்டஅள்ளி பேருராட்சியில் திமுக கவுன்சிலரை புறக்கணித்து, அதிமுக கவுன்சிலர்களுடன் இரகசிய கூட்டணி வைத்துள்ளதாக பரபரப்பு குற்றசாட்டு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 24 பிப்ரவரி, 2024

மாரன்டஅள்ளி பேருராட்சியில் திமுக கவுன்சிலரை புறக்கணித்து, அதிமுக கவுன்சிலர்களுடன் இரகசிய கூட்டணி வைத்துள்ளதாக பரபரப்பு குற்றசாட்டு.


தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவராக இருப்பவர் திமுகவை சேர்ந்த வெங்கடேசன், திமுக கவுன்சிலர்களால் பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சமீப காலமாக இவர் தனது சொந்த கட்சியை சேர்ந்த திமுக கவுன்சிலர்களை புறக்கணித்து விட்டு அதிமுக எம்.எல்.ஏ கே.பி.அன்பழகன் மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் கோவிந்தன், அனிதாரமேஷ் ஆகியோருடன் இரகசிய உறவை வைத்து கொண்டு திமுக கவுன்சிலர்கள் இன்றி பேருராட்சி மன்ற கூட்டம் நடத்துவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 22ம் தேதி வியாழக்கிழமை, பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில் கவுன்சிலர்கள்  கூட்டம் நடைப்பெற்றது.


அப்போது பேரூராட்சி வார்டு  பகுதிகளில் குடிநீர், சாலை, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து பல முறை இளநிலை பொறியாளரிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால், இளநிலை பொறியாளர் இக்கூட்டத்திற்க்கு வர வேண்டும் என கூறினார். ஆனால் அவர் வராததால் திமுகவை சேர்ந்த  கீதாவடிவேல், யதிந்தர், ரீனாகுழந்தைவேல், அபிராமிகாந்தி, புவனேஸ்வரி கார்த்திக்கேயன், சிவக்குமார், சுகந்தி ஆகிய கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணிப்பதாக தெரிவத்தனர்.


ஆனால் செயல் அலுவலர் குமுதா இளநிலை பொறியாளர் மாலை வந்து விடுவார் எனவே கூட்டத்தை மீண்டும் மாலை நடத்தலாம் என கூறினார். ஆனால் மறைமுகமாக 6 உறுப்பிணர்களை மட்டுமே வைத்து கொண்டு சட்டத்திற்க்கு புறம்பாக, முறைகேடாக தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளார்.


எனவே இக்கூட்டமும் இதில் போடப்பட்ட தீர்மானங்களும் சட்டப்படி  செல்லாது என்றும், மீண்டும் கவுன்சிலர் கூட்டம் நடத்த வேண்டும் என்றும், இன்று பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் மனு அளித்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad