தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகேவுள்ள வெள்ளக்கல் என்ற இடத்தி்ல் விபத்தில் சிக்கிய கார் ஒன்று திடிரென பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி வழியாக பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் பள்ளத்தில் கவிழந்து விபத்துக்குள்ளானது, காரிலிருந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
தருமபுரியிலிருந்து விரைந்த தீயணைப்பு துறையி்னர் பற்றி எரிந்த காரின் மேல் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீ மேலும் பரவாமல் தடுத்தனர், சம்பவம் தொடர்பாக தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள பதிவெண்கொண்ட கார் என்பதால், காரில் வந்தவர்கள் கேரளாவை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தெரிகிறது, நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவுமி்ல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக