பேளாரஅள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைப்பெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 19 பிப்ரவரி, 2024

பேளாரஅள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைப்பெற்றது.


தர்மபுரி மாவட்டம்,பாலக்கோடு, அடுத்துள்ள பேளாரஅள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது. இவ்விழாவிற்க்கு பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகம், அனைவரையும் வரவேற்று பேசினார். பள்ளி மேலாண்மைக் குழு  தலைவர்   பழனியம்மாள் தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேளார அள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ராதா மாரியப்பன் சிறப்பு  விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து, பள்ளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சியை கண்டு களித்தார். இந்நிகழ்ச்சியில்  ஆசிரியர்கள், முனியாண்டி, அரசு, பழனியம்மாள், ரவி, கெளதமி,பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad