தருமபுரி சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க. அலுவலகம் திறப்பு- கட்சி கொடியேற்று விழா - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 22 பிப்ரவரி, 2024

தருமபுரி சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க. அலுவலகம் திறப்பு- கட்சி கொடியேற்று விழா


தர்மபுரி சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க. அலுவலகம் திறப்பு விழா மற்றும் கட்சியின் கொடியேற்று விழா தர்மபுரி சந்தைப்பேட்டையில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட பொதுச் செயலாளரும், தருமபுரி  சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளருமான ஐஸ்வர்யம் முருகன் தலைமை தாங்கினார். 

மாநில செயலாளர் வெங்கடேசன், மாவட்ட பார்வையாளர் முனிராஜ், தருமபுரி மாவட்ட தலைவர் பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கட்சியின் மாநில துணைத்தலைவரும், பெருங்கோட்ட பொறுப்பாளருமான கே.பி. ராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் தருமபுரி சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க. அலுவலகத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.


விழாவில் மாவட்டத் துணைத் தலைவர்கள் சோபன், சிவசக்தி, மாவட்ட செயலாளர் கிருஷ்ணவேணி,  இளைஞரணி மாநில துணைத்தலைவர் புவனேஷ், மண்டலத் தலைவர்கள்  ஜிம் சக்தி, மாதன், சக்தி, பழனிசாமி, கணபதி மற்றும் கட்சியின் அனைத்து பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad