அரசு பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்து சென்ற பெண் பயணி பாதியில் இறக்கிவிட்ட சம்பவம் : ஓட்டுநர், நடத்துனர் தற்காலிக பணி நீக்கம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 21 பிப்ரவரி, 2024

அரசு பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்து சென்ற பெண் பயணி பாதியில் இறக்கிவிட்ட சம்பவம் : ஓட்டுநர், நடத்துனர் தற்காலிக பணி நீக்கம்.


அரூர் அருகே அரசு பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்ற பெண் பயணி ஒருவரை பாதியில் இறக்கிவிட்டு சென்ற பேருந்தின் ஓட்டுநர், நடத்துனர் ஆகிய இருவரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


தருமபுரி மாவட்டம், அரூரில் இருந்து ஒசூர் வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு புறநகர் பேருந்தில், நவலை சேர்ந்த பாஞ்சாலை (59)என்ற  பெண் பயணி மாட்டிறைச்சியை எடுத்துச் சென்றாராம். இதையடுத்து, அரூர் மொரப்பூர் வழித்தடத்தில் பாதுகாப்பு இல்லாத இடத்தில் பெண் பயணியை அரசு பேருந்தில் இருந்து பாதியில் இறக்கிவிட்டதாக புகார் எழுந்தது.


இந்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட அரசு பேருந்தில் பணிபுரிந்த ஓட்டுநர் என்.சசிகுமார், நடத்துனர் கே.ரகு ஆகியோரை தற்காலிக பணிநீக்கம் செய்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் தருமபுரி மண்டல பொதுமேலாளர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad