விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் அ. பள்ளிப்பட்டி வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 17 பிப்ரவரி, 2024

விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் அ. பள்ளிப்பட்டி வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்றது.


பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வேளாண்மை துறையின் கீழ் விரிவாக்க மறு சீரமைப்பு திட்டத்தின் சார்பில் வட்டார தொழில்நுட்ப குழு மற்றும்  விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் அ. பள்ளிப்பட்டி வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்றது.


இக்குழு கூட்டத்திற்கு வேளாண்மை உதவி இயக்குனர் திரு கோ.முனி கிருஷ்ணன் அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைத்தார், மேலும் அவர் பேசுகையில் வட்டார உழவர் ஆலோசனை குழு கூட்டத்தின் நோக்கம் மற்றும் குழுவின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார், மேலும இக்கூட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக உதவி கால்நடை மருத்துவர் திரு விஜயகுமார் அவர்கள் கலந்துகொண்டு, கால்நடைகளில் அதிக பால் உற்பத்தி தொழில்நுட்பங்கள், தீவன மேலாண்மை முறைகள், மற்றும் கோடைகாலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள் குறித்தும் விளக்கமாக எடுத்து வைத்தார். 


மேலும் வட்டார ஆலோசனைக் குழு கூட்டத்தில் வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறையின் சார்பாக உதவ வேளாண்மை அலுவலர் திரு தமிழரசு அவர்கள் கலந்து கொண்டு, மின்னணு வேளாண் வர்த்தகம், மற்றும் பண்ணை வழி வியாபாரம் குறித்தும், விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை பயன்படுத்தி பொருளீட்டு கடன் பெறுவது மற்றும் அதிக லாபத்திற்கு விவசாயிகள் உழவர் சந்தைகளை பயன்படுத்தி கொள்ளுமாறும் விவசாயிகளை வலியுறுத்தினார். மேலும், வனக்காப்பாளர் திரு செந்தமிழ் அவர்கள் கலந்து கொண்டு பசுமை தமிழக திட்டம் மற்றும் தமிழ்நாடு பன்மை பெருக்க பசுமை பாதுகாப்பு திட்டம் குறித்தும், காப்புக் காடுகளை ஒட்டியுள்ள விவசாய நிலப் பகுதிகளில் வன உயிர்களால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு இழப்பீடு வழங்குவது குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார்.


இக்கூட்டத்தில் துணை வேளாண் அலுவலர் திரு ஆறுமுகம், உதவி வேளாண்மை அலுவலர் திரு திருநாவுக்கரசு ஆகியோர்கள் கலந்து கொண்டு துறை ரீதியான மானிய திட்டங்கள் குறித்தும் மற்றும் பல்வேறு சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கமாக விளக்கம் அளித்தனர். மேலும் இக்கூட்டத்தில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் திரு சரவணன் அவர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்க திட்ட செயல்பாடுகள் மற்றும் உழவன் செயலி குறித்தும் விளக்கம் அளித்தார்.


இக் கூட்டத்தில் வட்டார உழவர் ஆலோசனைக் குழு கூட்ட தலைவர் திரு சண்முகம் மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர் திரு சண்முகம் , திரு திருப்பதி உட்பட குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்,  இந்த வட்டார ஆலோசனை குழு கூட்டத்தில் முடிவில் நடப்பு ஆண்டிற்கான திட்ட செயல்பாடுகள், குறித்தும், அவற்றை முறையாக செயல்படுத்துவது குறித்தும் குழு உறுப்பினர்கள் அனைவராலும் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad