தருமபுரி மாவட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிடு, தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று கொண்டிருக்கின்றன. புதிய வாக்காளர் சேர்ப்பு, வாக்களர் பட்டியல் பெயர், சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பணிகள் முடிந்து வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி நடைப்பெற்று வருகிறது. அதே போன்று வாக்குசாவடி மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பாலக்கோட்டில் உள்ள அண்ணா தெற்கு ஊராட்சி, ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வாக்குசாவடி மையம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சாந்தி ஆய்வு செய்தார்.
அப்போது மாற்று திறனாளிகள், முதியோர்கள் செல்ல வசதியாக சாய்வு தளம் குறித்தும் ஆய்வு செய்தார். மேலும் வாக்குசாவடி மையம் தொடர்பான பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது பாலக்கோடு தாசில்தார் ஆறுமுகம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக