பாலக்கோடு தக்காளி மார்கெட்டிற்கு தின தோறும் 300 டன் அளவிற்கு தக்காளி வரத்து உள்ளது. இச்சந்தையில் இருந்து தேனி, திண்டுக்கல், மதுரை, சேலம் , ஈரோடு போன்ற வெளி மாவட்டங்களுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. தக்காளி மார்கெட்டிற்கு பாலக்கோடு சுற்று வட்டார விவசாயிகள் காரிமங்கலம்,பெல்ரம்பட்டி, பொப்பிடி , சோமனஹள்ளி, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, பேளாரஹள்ளி, எலங்காளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக பரப்பளவில் தக்காளியை விவசாயிகள் சாகுபடி செய்து வரும் நிலையில் தற்போது கோடை வெயில் அதிகரிப்பு காரணமாக அதிக அளவில் தக்காளி பழங்கள் பழுப்பாதால் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
தக்காளி வரத்து அதிகரித்ததால் மார்கெட்டில் கொள்முதல் விலை கிலோ 10முதல் 12ரூபாய் வரை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர் .15 கிலோ கொண்ட ஒரு கூடை தக்காளி 150 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்ற மாதங்களில் கிலோ 30 முதல் 40 ரூபாய் வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது. வரும் நாட்களில் மேலும் விலை குறையும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக