திறனாளிகளை ஊக்குவிக்கும் தருமபுரி யூனிக்யு கான்செப்ட் மேக்ஸ் அபாகஸ் நிறுவனம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 5 பிப்ரவரி, 2024

திறனாளிகளை ஊக்குவிக்கும் தருமபுரி யூனிக்யு கான்செப்ட் மேக்ஸ் அபாகஸ் நிறுவனம்.


தருமபுரியை மையமாக கொண்டு செயல்படும் யூனிக்யு கான்செப்ட் மேக்ஸ் அபாகஸ் நிறுவனம்  கடந்த 3ஆம் தேதி தருமபுரி சாலைவிநாயகர் சாலையில் மாவட்ட அளவிலான கையெழுத்து, ஓவியம், நடனம், சிலம்பம், மனக்கணக்கு போன்ற பிரிவுகளில் தனித்திறனார்களை கண்டறிந்து ஊக்குவிக்கும் போட்டி  நடைபெற்றது.

மேலும் அதில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு கடந்த 4ஆம் தேதி பூபதி மஹாலில் நடைபெற்றது. நிகழ்வில் யூனிக்யு கான்செப்ட் மேக்ஸ் அபாகஸ் நிறுவன இயக்குனர் திருமதி. நந்தினி அழகர் தலைமை தாங்கினார், கையெழுத்து, ஓவியம், நடனம், சிலம்பம், மனக்கணக்கு போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற சுமார் 700  மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.


இந்த நிகழ்வில் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், முன்னாள் நகர மன்ற தலைவர் எஸ்.ஆர். வெற்றிவேல், தருமபுரி விஷ்வ பாரதி பள்ளி தாளாளர் ரவி, விஜய் டிவி புகழ் மூக்குத்தி முருகன், செவன்த்டே பள்ளி முதல்வர் புஷ்பராஜ், D2V மீடியா குழுமம், தமிழக குரல் மற்றும் தகடூர் குரல் செய்தி நிறுவனங்களின் இயக்குனர் வினோத்குமார், பி.எஸ்.பி அசோக், திமுக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் முத்தமிழன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகளை வழங்கினர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad