கூட்டுறவு சர்க்கரை ஆலை, பாலிடெக்னிக் கல்லூரியில் தொழுநோய் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 12 பிப்ரவரி, 2024

கூட்டுறவு சர்க்கரை ஆலை, பாலிடெக்னிக் கல்லூரியில் தொழுநோய் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.


தர்மபுரி, மாவட்டம், பாலக்கோடு அருகே திம்மம்பட்டியில் உள்ள, அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டமும், மாரண்டஅள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து தொழுநோய், குறித்து விழிப்புணர்வு முகாம், கல்லூரி முதல்வர் முனைவர், செல்வராணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நாட்டு நலப்பணித்திட்ட இயக்குநர் முனைவர்.முருகன் அனைவரையும் வரவேற்றார். இம்முகாமில்  மருத்துவப்பணிகள் மாவட்ட துணை இயக்குநர் புவனேஸ்வரி அவர்கள் புரஜெக்டர் மூலம் மாணவ - மாணவியர்களுக்கு தொழு நோய் குறித்து விழுப்புணர்வினை எடுத்துரைத்து விரிவாக பேசினார்

 

தொழுநோய் என்பது அதுவும் மற்ற நோய்களைப்போல் ஒரு கிருமியினால் ஏற்படுகிறது, மைக்ககோ பேக்டீரியம் லெப்ரே என்ற கிருமியினால் காற்றின் மூலம் பரவுகிறது என்றும் சிவந்த அல்லது வெளிர்ந்த உணர்ச்சி குறைந்த அல்லது உணர்ச்சியற்ற தேமல் தொழுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம் என்றும் மேலும் அறிகுறிகளாக கை கால்களில் மதமதப்பு, கால்பாதத்தில் ஆறாத புண், உடல் முழுவதும் எண்ணெய் பூசப்பட்டது போல் மினுமினுப்பாக இருப்பது, காது மடல்கள் தடித்து இருப்பது, உடல் முழுவதும் முடிச்சுகள் இருப்பது போன்றவைகள் அறிகுறிகளாக இருக்கலாம். மற்ற தேம்பல்களிலிருந்து  தொழுநோய் தேமல் எவ்வாறு  மாறுபட்டது என்று விரிவாக பேசினார்.


இம்முகாமில் வட்டார மருத்துவ அலுவலர். சிவகுரு, மருத்துவமல்லா மேற்பார்வையாளர் நாகராஜ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்  இளவரசு மருத்துவமல்லா மேற்பார்வையாளர் சேகர், சுகாதார ஆய்வாளர் சோமு ஆகியோர் கலந்து கொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad