மகேந்திரமங்கலம் பகுதியில் அனுமதியின்றி இயக்கிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிறுவனத்துக்கு சீல். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 21 பிப்ரவரி, 2024

மகேந்திரமங்கலம் பகுதியில் அனுமதியின்றி இயக்கிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிறுவனத்துக்கு சீல்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம் மகேந்திரமங்கலம் ஊராட்சி  திம்மராயனள்ளி  பஞ்சாயத்து பூத்திபட்டி கிராமத்தில் ஒர் விவசாய நிலத்தில் உரிய அனுமதி இன்றி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைத்து இரவு நேரங்களில் 20 லிட்டர் கேன்களில் பிடித்து விற்பனை செய்வதாக வந்த தகவல் அடிப்படையில், உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா, காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்‌‌ நந்தகோபால், உள்ளிட்ட குழுவினர் திம்மராயனள்ளி பகுதிகளில் திடீர் ஆய்வு செய்தனர்.


ஆய்வில் பூத்திப்பட்டி கிராமத்தில் ஒரு விவசாய நிலத்தில் சிறிய  கட்டிடத்தில், எந்தவித அனுமதியும் இன்றி,  20 லிட்டர்  குடிநீர் கேன்களில் சப்ளை   செய்திருப்பது கண்டறியப்பட்டது.   கட்டிடத்தில்  ஆர்.ஓ.(R.O.) சிஸ்டம் அமைத்து நிலத்தடி நீரிலிருந்து நீர் எடுத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்வது அறியப்பட்டது. மேற்படி செயலில் ஈடுபட்டவர் குறித்து விசாரித்த போது மாரண்டள்ளியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர்  நிலத்தினை குத்தகை எடுத்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவித்தார் ஆனால் எங்கும் அனுமதி பெறவில்லை.


உரிய அனுமதியின்றி சுத்திகரித்து அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்வது உணவு பாதுகாப்பு தர சட்டப்படி தவறு என்றும் சுத்திகரிக்கப்பட்ட  குடிநீர் விற்பனை செய்ய வேண்டும் என்றால் முதலில் நிலத்தடி நீர் எடுக்க உரிய அனுமதியுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் அவ்வாறு குடிநீர் எடுக்க உகந்ததா எனவும் பொது பணித்துறை அனுமதிக்கு பின்பே ஐ.எஸ்.ஐ. தர சான்று அதன்பின்   உணவு பாதுகாப்பு துறை உரிமம்  ஆகியவற்றின் அனுமதி பெற்று அடைக்கப்பட்ட குடிநீர் விற்பனை செய்ய வேண்டும். 


மேலும்  மேற்படி மூன்று துறைகள் மற்றும் உள்ளூர் பஞ்சாயத்து அனுமதி பெற்ற பின் குடிநீர் கேன் மற்றும் அடைக்கப்பட்ட பாட்டில்களில்  உரிய லேபிள் நடைமுறை அதாவது  பொருள் பெயர்,தயாரிப்பு முகவரி, தயாரிப்பு தேதி, முடிவு தேதி மற்றும்  ஐ.எஸ்.ஐ. எண், உணவு பாதுகாப்பு உரிமம் எண் அச்சிட்டு பிறகு சப்ளை செய்யப்பட வேண்டும் என விழிப்புணர்வு செய்யப்பட்டது.  அதுவரை எக்காரணம் கொண்டும் தண்ணீர் சப்ளை செய்யப்படக்கூடாது  எனத் தடை விதித்து எச்சரிக்கை நோட்டீஸ்  அளித்து  கம்பெனியை பூட்டி விட்டு சென்றனர். 


மேற்படி துறைகளின் உரிய அனுமதி பெற்ற பின்பு காண்பித்து சாவியை பெற்றுக் கொண்டு உரிய விதிமுறைகள் கடைபிடித்தால் அனுமதி அளிக்கப்படும் என மேற்படி நபரிடம் மாவட்ட நியமன அலுவலர் அறிவுறுத்தினார். ஆய்வில் மகேந்திரமங்கலம் காவல் நிலைய சிறப்பு நிலை காவலர் ஜீவானந்தம் உடன் இருந்தார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad