பாப்பிரெட்டிப்பட்டி வட்டார விவசாயிகளுக்கு தர்மபுரி உழவர் பயிற்சி நிலையத்தின் சார்பாக கிராம அளவிலான பயிற்சி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 21 பிப்ரவரி, 2024

பாப்பிரெட்டிப்பட்டி வட்டார விவசாயிகளுக்கு தர்மபுரி உழவர் பயிற்சி நிலையத்தின் சார்பாக கிராம அளவிலான பயிற்சி.


பாப்பிரெட்டிப்பட்டி வட்டார விவசாயிகளுக்கு தர்மபுரி உழவர் பயிற்சி நிலையத்தின் சார்பாக கிராம அளவிலான பயிற்சி  மெனசி கிராமத்தில் நடைபெற்றது, பயிற்சியை பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் திரு கோ.  முனிகிருஷ்ணன் அவர்கள் துவக்கி வைத்து, வேளாண்மை துறையின் முக்கிய திட்டங்கள் குறித்தும், மண் ஆய்வின் முக்கியத்துவம் விதை நேர்த்தி, திரவ உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் விளக்கம் அளித்தார், கால்நடை பராமரிப்பு துறையின் சார்பாக உதவி கால்நடை மருத்துவர் திரு செல்வகுமார் அவர்கள் கலந்துகொண்டு கோடை காலத்தில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் தடுப்பு முறைகள், பராமரிப்பு முறைகள் குறித்தும் விளக்கம் அளித்தார். 


மேலும் வனத்துறையின் சார்பில் வனவர் திரு செந்தில்குமார் அவர்கள் கலந்து கொண்டு வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்தும் வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு சூரிய மின் வேலி அமைக்க அனுமதி பெறுவது குறித்தும் ஒவ்வொரு மாதமும் தர்மபுரி மாவட்ட வன அலுவலர் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு விவசாயிகள் பயன் பெறுதல் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார், மேலும் மீன்வளத் துறையில் சார்பில் மீன்வள மேற்பார்வையாளர் திரு பூபதி ராஜா அவர்கள் கலந்து கொண்டு மீன்வளத்துறை திட்டங்கள் பற்றியும் குறிப்பாக உயிர் கூழ்மம் முறையில் (பயோ பிளாக்) மீன் வளர்ப்பது குறித்து விளக்கம் அளித்தார், மேலும் இப்ப பயிற்சியில் வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறையின் சார்பாக உதவி வேளாண்மை அலுவலர் தமிழரசு அவர்கள் கலந்து கொண்டு ஒழுங்கு முறை விற்பனை கூட்டங்களை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் விலை பொருட்களை அடகு வைத்து பொருளீட்டு கடன் பெறுவது குறித்தும் மேலும் உழவர் சந்தையை பயன்படுத்தி விவசாயிகள், காய்கறி பழங்களை அதிக விலைக்கு விற்று லாபம் பெறுவது குறித்தும் விளக்கம் அளித்தார். 


மேலும் பட்டு வளர்ச்சி துறையின் சார்பாக இளநிலை ஆய்வாளர் திரு கனகவேல் அவர்கள் கலந்து கொண்டு வெண்பட்டு வளர்ப்பு முறை தொழில் நுட்பங்கள் குறித்தும் நாற்றங்கால் தொழில்நுட்பங்கள் குறித்தும் மேலும் புழுமனை அமைப்பதற்கு மானியம் வழங்குவது குறித்தும் விளக்கம் அளித்தார், மேலும் இப் பயிற்சியில் தர்மபுரி மாவட்ட உழவர் பயிற்சி நிலையத்தின் சார்பாக வேளாண்மை அலுவலர் திருமதி தேவி அவர்கள் கலந்துகொண்டு விவசாயிகள் உழவன் செயலி பயன்படுத்துவது குறித்தும், பிரதமரின் கௌரவ நிதி திட்டம் குறித்தும், மாநில மற்றும் மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் விவசாயிகள் கலந்து கொள்ளுதல் குறித்தும்  விளக்கம் அளித்தார். 


மேலும் பயிற்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் திரு சரவணன் அவர்கள் கலந்து கொண்டு உழவன் செயலியை பயன்படுத்தி விவசாயிகள் இடுபொருள் முன்பதிவு செய்வது குறித்தும், விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கம் அளித்தார். 


மேலும் இப் பயிற்சியில் உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் திரு சண்முகம் மற்றும் திருப்பதி ஆகியவர்கள் உட்பட 25 விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad