தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, அடுத்த தொட்டபாவளி கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவை, முன்னிட்டு எருதுவிடும் விழா நடைப்பெற்றது. இதில், தொட்ட பாவளி, அமானி மல்லாபுபுரம். நல்லூர், பெலமாரனஅள்ளி, கடத்திக் கொள்மேடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 150 காளைகள் கலந்து கொண்டன.
முன்னதாக கிராம மக்கள் மேளதாளங்களுடன் குல வழக்கப்படி கோ பூஜை செய்து புனித நீரை, காளைகளின் மேல் தெளித்தனர். முதலில் ஊர் கவுண்டர் காளை அவிழ்த்து விடப்பட்டது, அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள், வாடிவாசல் வழியாக ஒவ்வென்றாக திறந்து விடப்பட்டன.
சீறி பாய்ந்து வரும் காளைகளை அடக்க ஏராளமான இளைஞர் போட்டி போட்டு காளையை விரட்டி சென்றனர், இளைஞர்களிடம் பிடிபடமால் போக்கு காட்டி சென்ற காளைகளுக்கும், சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்கள் எருது விடும் விழாவினை கண்டு களித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக