பென்னாகரம் வட்டத்தில் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்த்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 21 பிப்ரவரி, 2024

பென்னாகரம் வட்டத்தில் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்த்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களை நாடி, மக்கள் குறைகளைக்கேட்டு உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார்கள்.

இத்திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட "உங்களைத்தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று (21.02.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு. உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தினை அறிவித்தார்கள். "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்பது பல்வேறு சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவதற்கும், அரசின் பல்வேறு திட்டங்கள் / திட்டங்கள் / பணிகளை விரைவுபடுத்துவதற்கும் மற்றொரு திட்டமாகும்.


"உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டத்தின்படி மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் பல்வேறு மாவட்ட அளவிலான அலுவலர்கள் பொதுமக்களை அவர்களின் வீட்டு வாசலில் அணுகும் நோக்கில், ஒவ்வொரு மாதமும் நான்காவது புதன்கிழமை அன்று வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.


இதன் அடிப்படையில், தருமபுரி மாவட்டத்தில் 2024 பிப்ரவரி மாதத்திற்கான "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்ட முகாம் பென்னாகரம் வட்டத்தில் இன்று (21.02.2024) காலை 09.00 மணி முதல் நாளை (22.02.2024) காலை 09.00 மணி வரை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது.


மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை), திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்), இணை இயக்குநர் (வேளாண்மை), இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்பு), இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்), துணை இயக்குநர் (பொது சுகாதாரம்), கோட்டப் பொறியாளர் (நெடுஞ்சாலைகள்), நிர்வாகப் பொறியாளர் (நீர்வளத் துறை), நகராட்சி நிர்வாகம், மண்டல இயக்குநர், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்), முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர் உள்ளிட்ட மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்துகொண்டுள்ளனர்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட “உங்களைத் தேடி உங்கள் ஊரில்“ திட்டத்தின் கீழ் இன்று (21.02.2024) தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், நாகதாசம்பட்டி கிராம நிர்வாக அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் திடீரென ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மற்றும் அதன் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். குறிப்பாக பொதுமக்களின் மனுக்களுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள கிராம நிர்வாக அலுவலருக்கு அறிவுறுத்தினார்கள்.


இதனைதொடர்ந்து, நாகதாசம்பட்டி அங்கன்வாடி மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அங்கன்வாடி மையம் மற்றும் சமையல் கூட்டத்தினை சுகாதாரமாக பராமரித்திட அறிவுறுத்தியதோடு, குழந்தைகளுக்கு வழங்கப்படும் சரிவிகித உணவு குறித்தும், கற்றல் திறன் குறித்தும் கேட்டறிந்தார்கள். 


மேலும், நாகதாசம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவு குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு, இப்பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடத்தில் குழந்தைகளின் கற்றல் திறன் குறித்தும், பள்ளி கட்டடத்தின் உறுதித் தன்மை குறித்தும் ஆய்வு மேற்கொண்டு பள்ளி வளாகத்தை தூய்மையாக பராமரித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்கள் பின்னர், “உங்களைத் தேடி உங்கள் ஊரில்“ திட்டத்தின் கீழ் பென்னாகரம் வட்டம், நாகதாசம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, உயிர் காக்கும் மருந்துகளின் இருப்பு குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்ததோடு, 15-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.1.24 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட “உங்களைத்தேடி உங்கள் ஊரில்“ திட்டத்தின் கீழ் இன்று (21.02.2024) தருமபுரி மாவட்டம்,  பென்னாகரம் வட்டம், ஆதனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் செயல்பட்டு வரும் கெட்டூர் பொது விநியோக திட்ட பகுதிநேர நியாய விலை கடையினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பொருட்களின் இருப்பு குறித்து கேட்டறிந்தார்கள்.


இதனைதொடர்ந்து, கெட்டூரில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் காலிஃப்ளவர் பயிரிடப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். 

பென்னாகரம் வட்டம், ரங்காபுரம் பகுதியில், வேளாண்மை பொறியியல்

துறையின் சார்பில் வேளாண் இயந்திரமாக்கல்  திட்டத்தின் கீழ் ரூ. 7.00 இலட்சம்

மானியம், ரூ. 3.50 இலட்சம் விவசாயி பங்களிப்பு என ரூ.10.50 இலட்சம் மதிப்பீட்டில்

வழங்கப்பட்டுள்ள டிராக்டர் இயந்திரத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர்

திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு அதன் பயன்பாடுகள் குறித்து


விவசாயியிடம் கேட்டறிந்தார்கள். மேலும், இப்பகுதியில் ஊரக வளர்ச்சி துறையின்

சார்பில் புதிதாக குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு, குடிநீர் வழங்கப்பட்டு வருவதை 

நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

பின்னர் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.18.30

இலட்சம் மதிப்பீட்டில் குருமன்குட்டை மேம்பாடு செய்யப்பட்டு வருவதையும், தமிழ்நாடு

ஊரக  வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் பென்னாகரம் வட்டார மேலாண்மை அழகில்

செயல்பட்டு வரும் பாலின வள மையத்தினையும், வேளாண்மை துறையின் சார்பில்

ரூ.34,000/- மானியத்தில் வழங்கப்பட்டுள்ள ரோடோவட்டர் கருவினையும், பென்னாகரம்

ஊராட்சி ஒன்றியம், பருவதனஅல்லி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி

திட்டத்தின் கீழ் ரூ.53,000/- மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள முருங்கை

நாற்றாங்காலினையும், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் கூத்தப்பாடி ஊராட்சி,

நாகமரை முதல் கி.அக்ரஹாரம் வரை 1 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ.41.20 இலட்சம்

மதிப்பீட்டில் நடைபெற்று சாலை மேம்படுத்தும் பணியினையும், குள்ளாத்திரம்பட்டி புதூர்

அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளியினையும் மாவட்ட ஆட்சித் தலைவர்

திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட “உங்களைத்

தேடி உங்கள் ஊரில்“ திட்டத்தின் கீழ் மூங்கில் மடுவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு

கடன் சங்கத்தினையும், ஏரியூர் ஊராட்சி ஒன்றியம், சின்னப்பநல்லூர், ஆழ்துளை

கிணற்றின் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருவதையும், ஜக்கம்பட்டி

பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித் தலைவர்

திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்

இதனை தொடர்ந்து, பென்னாகரம் வட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக

கிடங்கினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு

மேற்கொண்டு, கிடங்கிலிருந்து நியாய விலை கடைகளுக்கு அனுப்பப்படும்

பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். மேலும், பென்னாகரம்

அனைத்து மகளிர் காவல் நிலையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில்

பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அரசின் அனைத்து நலத் திட்டங்களும்,

சேவைகளும் தங்கு தடையின்றி தகுதியான மக்களைச் சென்று அடைவதை உறுதி

செய்யும் பொருட்டு பல்வேறு அறிவுரைகளை அலுவலர்களுக்கு வழங்கினார்கள். மேலும்,

அனைத்து துறை முதல் நிலை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ள பகுதிகளில்

கள ஆய்வில் ஈடுபட்டு, சேவைகள், திட்டப்பணிகளின் நிலை குறித்து கருத்துக்களை

பெற்றார்கள்.

ஆய்வினை தொடர்ந்து, பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள சமுதாய

கூடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தலைமையில்

அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த மதிப்பாய்வின்

போது, வருகைதந்த அலுவலர்கள் களத்தின் சேவைகள், திட்டப்பணிகளின் நிலை குறித்த

தங்கள் கருத்துக்களை தெரிவித்தார்கள். மேலும், திட்ட இயக்குநர் மகளிர் திட்டத்தின்

சார்பில் இன்றைய தினம் மனு வழங்கிய மகளிர் சுய உதவிக்குழுக்களின் கோரிக்கைகள்

மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 7 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு

ரூ.50.60 இலட்சம் மதிப்பில் சுய உதவிக்குழு கடன் உதவிகளை மாவட்ட

ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் வழங்கினார்கள்.


முன்னதாக, இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில்

அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த

சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை

மனுக்களைப் பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள

அறிவுறுத்தப்பட்டது.

இதனைதொடர்ந்து, தித்தியோப்பனஅள்ளியில் ஊராட்சியில் பொதுமக்கள் மற்றும்

மாணவ, மாணவியர்களுடன் அடிப்படை தேவைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்

திருமதி.கி.சாந்தி, இ.ஆ.ப., அவர்கள் கலந்துரையாடி, குறைகளைக் கேட்டறிந்து,

பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற உள்ளார்கள்.

இந்நிகழ்வுகளின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன்

ஜேசுபாதம், தருமபுரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி

முகமை திட்ட இயக்குநர் திரு.கௌரவ் குமார் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.

செ. பால் பிரின்ஸ்லி ராஜ்குமார், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி,

மாவட்ட அனைத்து துறை முதன்மை அலுவலர்கள், பென்னாகரம் வருவாய் வட்டாட்சியர்

திரு.சுகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.கிருஷ்ணன், திரு.கணேசன், ஏரியூர்

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.வடிவேலன், திரு. விமலன் ஆகியோர்

கலந்துகொண்டனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad